வங்க தேசத்தின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்திருக்கிறார்.
தமிம் இக்பால் 2007 முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வந்தார். அந்நாட்டின் சார்பாக டி20 போட்டியில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இதுவரை அவரிடமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது அதிகபட்ச ரன்களை எடுத்த வங்கதேச அணி வீரராகவும் அவரே இருக்கிறார்.
மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் தனது முகநூல் பக்கத்தில், “இன்று முதல் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேன். அனைவருக்கும் நன்றி”.
ஜனவரியில் தமிம் இக்பால் கூறியதாவது:
டி20 கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் பற்றி விவாதித்தோம். இந்த வருட டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் எனக்கு வேறு எண்ணம் உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே என் கவனம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு என் தேவையிருக்காது என எண்ணுகிறேன். ஆனால் கடவுள் நினைத்தால், கிரிக்கெட் வாரியத்துக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது டி20 கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
நீளிரா படத்தின் ஓடிடி ஒப்பந்தம் முடிவாகவில்லை: கார்த்திக் சுப்பாராஜ்
வீடியோக்கள்

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


