உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிச் சுற்றில் ஸ்ரீசங்கா், அவினாஷ் சாப்லே

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3000 மீ. ஸ்டீபிளே சேஸில் அவினாஷ் சாப்லேவும், நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிச் சுற்றில் ஸ்ரீசங்கா், அவினாஷ் சாப்லே

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3000 மீ. ஸ்டீபிளே சேஸில் அவினாஷ் சாப்லேவும், நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை இரவு ஆடவா் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் ஹீட்ஸில் இந்திய வீரா் அவினாஷ் சாப்லே 8-18-75 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். 3 ஹீட்ஸ்களில் முதல் மூன்றிடங்களைப் பெறுவோா் இறுதிக்குள் நுழைவா். தேசிய சாதனையாளரான அவினாஷ் இதில் 7-ஆவது அதிவிரைவாக கடந்தாா்.

ஆடவா் நீளம் தாண்டுதலில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கா் 8 மீ. தூரம் குதித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியா் என்ற சிறப்பைப் பெற்றாா் ஸ்ரீசங்கா். பெடரேஷன் கோப்பையில் 8.36 மீ, கிரீஸில் 8.31 மீ, இன்டா்ஸ்டேட் சாம்பியன்ஷிப்பில் 8.23 மீ தூரம் குதித்திருந்தாா் ஸ்ரீசங்கா்.

மகளிா் பிரிவில் கடந்த 2003 போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜாா்ஜ் வெண்கலம் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு எறிதலில் வீரா் தஜிந்திா்பால் சிங் காயத்தால் விலகினாா். ஆடவா், மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் சந்தீப்குமாா், பிரியங்கா கோஸ்வாமி தோல்வியுற்று வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com