தீபக் ஹூடா ஏன் இல்லை?- முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி 

இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏனென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏனென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தீபக் ஹூடா இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். டி20 போட்டியில் அவரது சராசரி 68.33 என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 அணியில் சேர்க்காதது குறித்து முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் தேர்வுக்குழு தலைவர்  கிரிஷ் ஸ்ரீகாந்த், "தீபக் ஹூடா எங்கே? அவர் டி20யிலும் ஒருநாள் போட்டியிலும் நன்றாக விளையாடினார். அவர்தான் முக்கியமாக அணியில் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அது பேட்டிங் ஆல்ரவுண்டரோ அல்லது பவுலிங் ஆல்ரவுண்டரோ யாராக இருந்தாலும் அணிக்கு முக்கியவானர்கள் ஆவர்" என்றார். இதற்கு ஓஜா திராவிட் வேறு மாதிரி யோசித்து இருக்கலாம் என்றார். “நான் திராவிட் எண்ணம் கேட்கவில்லை. நீ என்ன நினைக்கிறாய்? ஹூடா விளையாடியிருக்கலாமா வேண்டாமா” எனக் கேட்டதற்கு, “கண்டிப்பாக விளையாடி இருக்க வேண்டும்” என ஓஜா பதிலளித்தார். “அதுதான். அவ்வளவுதான்” என விவாத்தினை கிரிஷ் ஸ்ரீகாந்த் முடித்து வைத்தார். 

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாகவே விளையாடினர். இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com