7ஆம் எண் ஜெர்சியை அணிந்ததற்கு இதுவே காரணம்...ரகசியத்தை சொன்ன தோனி
By DIN | Published On : 18th March 2022 02:19 PM | Last Updated : 18th March 2022 02:19 PM | அ+அ அ- |

தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் 7ஆம் எண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுவருகிறது. குறிப்பாக, அது அவரது அதிர்ஷ்டமான எண் என்றும் கூறப்பட்டுவருகிறது,
இதுநாள் வரை, ஏழாம் எண் குறித்து ரகசியம் காத்து வந்த தோனி தற்போது அதை வெளியிட்டுள்ளார். அது தன்னுடைய அதிர்ஷ்டமான நாள் இல்லை அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "7ஆம் எண் எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று நிறைய பேர் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். அதாவது, 7வது மாதம் 7வது நாள். இதுவே அதற்கு காரணம். எந்த எண் நல்ல எண் என ஆராய்வதற்கு பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த நினைத்தேன். இதைப் பற்றி மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டதற்கு, நான் வெவ்வேறு பதில்களை கூறினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்காக அளித்த பேட்டியில் தோனி ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் அதிருப்தி தலைவா் பூபிந்தா் சிங் ஹூடாவுடன் ராகுல் சந்திப்பு
மேலும், "நிறைய பேர் 7 ஒரு நடுநிலை எண் என்றும், அது உங்களுக்கு வேலை செய்யாவிட்டாலும், உண்மையில் உங்களுக்கு எதிராக திரும்பாது என்றும் சொன்னார்கள். அதையும் என் பதிலில் சேர்த்தேன். நான் மிகவும் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல, ஆனால், அது என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு எண். எனவே, நான் பல ஆண்டுகளாக அந்த எண்ணை பயன்படுத்திவருகிறேன்" என்றார்.
2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...