ஐபிஎல்.. முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா விலகல்: பிசிசிஐ

அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமியும், பிரசித் கிருஷ்ணாவும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல்.. முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா விலகல்: பிசிசிஐ

ஐபிஎல் 2024 தொடர் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இந்திய வீரர்களின் தற்போதைய நிலை குறித்து பிசிசிஐ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட மருத்துவ அறிக்கை:

ரிஷப் பந்த்

கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த், 14 மாத சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் பேட்டர் - விக்கெட் கீப்பராக விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்.. முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா விலகல்: பிசிசிஐ
பாகிஸ்தான் ஹிந்துக்கள் நிம்மதியாக மூச்சு விடலாம்: தனிஷ் கனேரியா!

முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் பிப். 26-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் பிசிசிஐ-யின் மருத்துவக் குழு கண்காணிப்பில் இருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்.

பிரசித் கிருஷ்ணா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கடந்த பிப். 23-ஆம் தேதி இடது தொடையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார். விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகெதமியில் பயிற்சிக்கு செல்லவுள்ளார். ஐபிஎல்லில் இந்தாண்டு பங்கேற்க மாட்டார்.

முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com