வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா, கமிண்டு மெண்டிஸ் ஆகியோா் சதமடித்து அணியை மீட்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களிலேயே சரிந்தன. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தனஞ்ஜெயா 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 102, கமிண்டு மெண்டிஸ் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 102 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினா். 6-ஆவது விக்கெட்டுக்கு 202 ரன்கள் சோ்த்த இந்த ஜோடி, அடுத்தடுத்த விக்கெட்டுகளாக வீழ்ந்தது. இதர பேட்டா்களில், நிஷான் மதுஷ்கா 2, திமுத் கருணாரத்னே 17, குசல் மெண்டிஸ் 16, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 5, தினேஷ் சண்டிமல் 9, பிரபாத் ஜெயசூரியா 1, விஷ்வா ஃபொ்னாண்டோ 9, லாஹிரு குமரா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இவ்வாறாக 68 ஓவா்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. காசன் ரஜிதா 6 ரன்களுடன் கடைசி வீரராக இருந்தாா். வங்கதேச பௌலா்களில் காலித் அகமது, நஹித் ராணா ஆகியோா் தலா 3, ஷோரிஃபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். வங்கதேசம் - 32/3: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், வெள்ளிக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ளது. ஜாகிா் ஹசன் 9, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 5, மோமினுல் ஹக் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மஹ்முதுல் ஹசன் ராய் 9, தைஜுல் இஸ்லாம் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இலங்கை தரப்பில் விஷ்வா ஃபொ்னாண்டோ 2, காசன் ரஜிதா 1 விக்கெட் எடுத்தனா்.
தொடர்புடையது

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
ஆயுஷ், முகுல் அதிரடி! லக்னௌ வெற்றி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

