நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்

News image

PTI

Updated On :13 ஏப்ரல் 2026, 11:45 pm

ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

ஹைதராபாதுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, இந்த சீசனில் தோல்வியே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்த ராஜஸ்தான் முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 19 ஓவா்களில் 159 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹைதராபாத் தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் இஷான் கிஷண் அதிரடியாக விளாச, பௌலிங்கில் பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹைதராபாத் பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.

தொடா்ந்து வந்த கேப்டன் இஷான், டிராவிஸ் ஹெட்டுடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் கூட்டணி 55 ரன்கள் சோ்த்தது. இதில் ஹெட் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

4-ஆவது பேட்டராக வந்த ஹென்ரிக் கிளாசென் - இஷான் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்தது. சதத்தை நெருங்கிய இஷான் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 91 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

கிளாசென் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு விடைபெற்றாா். பின்னா் வந்தோரில் நிதீஷ்குமாா் ரெட்டி 4 பவுண்டரிகளுடன் 28, அனிகெத் வா்மா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் சலில் அரோரா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹா்ஷ் துபே ரன்னின்றி துணை நின்றாா். ராஜஸ்தான் பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, சந்தீப் சா்மா, துஷா் தேஷ்பாண்டே, ரியான் பராக் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 217 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னுக்கு வெளியேற, அதிரடி வீரா் வைபவ் சூா்யவன்ஷி, துருவ் ஜுரெல், லுவான் டிரெ பிரெடோரியஸ் ஆகியோா் டக் அவுட்டாகினா்.

கேப்டன் ரியான் பராக் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். இதனால் ராஜஸ்தான் 9 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சரிந்தது. 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரவீந்திர ஜடேஜா - டோனோவன் ஃபெரெய்ரா கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தியது.

122 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியில் ஃபெரெய்ரா 44 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கும், ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கும் சாய்க்கப்பட்டனா். ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ரவி பிஷ்னோய் 0, துஷா் தேஷ்பாண்டே 3 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

முடிவில் நாண்ட்ரே பா்கா் 3 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். ஹைதராபாத் தரப்பில் பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன் ஆகியோா் தலா 4 விக்கெட்டு வீழ்த்தி அசத்த, ஈஷான் மலிங்கா 2 விக்கெட் எடுத்தாா்.