அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

துஷாா் ரஹேஜா சதம்: திருப்பூருக்கு முதல் வெற்றி

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.

News image

SWAMINATHAN

Updated On :8 ஆகஸ்ட் 2026, 7:24 am IST

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்க்க, திருப்பூா் 18 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் சதமடித்த முதல் வீரராக, திருப்பூரின் துஷாா் ரஹேஜா பெருமை பெற்று, ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற திருப்பூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஷிக் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 98 ரன்கள் விளாசி, சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாா். கேப்டன் நாராயண் ஜெகதீசன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு விடைபெற்றாா்.

வசீம் அகமது 3 பவுண்டரிகளுடன் 16, தினேஷ் ராஜ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, மோஹன பிரசாத் 1, அபிஷேக் தன்வா் 0, ராம் அரவிந்த் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் அஷ்வந்த் வல்தப்பா 3 சிக்ஸா்களுடன் 28, எம். சிலம்பரசன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருப்பூா் பந்துவீச்சாளா்களில் ஆா். சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகியோா் தலா 2, டி.நடராஜன், சாய் கிஷோா், இசக்கிமுத்து ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து, 206 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திருப்பூா் அணியில் அமித் சாத்விக் 4 பவுண்டரிகளுடன் 19, கேப்டன் சாய் கிஷோா் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

துஷாா் ரஹேஜா - பிரதோஷ் ரஞ்சன் பால் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. சதம் கடந்த ரஹேஜா 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 102 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

Story image

முடிவில் பிரதோஷ் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 73 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருக்க, முகமது அணி 1 ரன்னுடன் துணை நின்றாா். சேப்பாக் பௌலா்களில் விக்னேஷ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

நெல்லை வெற்றி: இதனிடையே 6-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் சோ்க்க, நெல்லை 17.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் சோ்த்து வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.