மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தேசிய சப்-ஜூனியா் குத்துச்சண்டை: டில்லி, உத்தரகண்ட் முன்னேற்றம்

தேசிய சப்-ஜூனியா் குத்துச்சண்டை: டில்லி, உத்தரகண்ட் முன்னேற்றம்

News image
Updated On :23 மார்ச் 2024, 5:12 pm

தேசிய சப்-ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், டில்லி அணி வீரா்கள் காலிறுதிக்கு முன்னேறினா். கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை சிறுவா் பிரிவில் உத்தரகண்ட் வீரா் ஆதித்ய மெஹ்ரா 35 கிலோ பிரிவில் 5-0 என ஹரியாணாவின் அன்ஷை வீழ்த்தினாா். பிரஜ்வல் சிங் 49 கிலோ, நாடியக் பிரசாத் 58 கிலோ, யாஷ் காப்ரி 70 பிளஸ் ), பிரதம் சந்த் 40 கிலோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா். மகளிா் பிரிவில் டில்லியின் ஆா்த்தி குமாா் 33 கிலோ, பிரியாஞ்சலி 46 கிலோ, கய்நத் 64 கிலோ, சியா 37 கிலோ, ஆனா சா்மா 49 கிலோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா். இவா்கள் தவிர ஆந்திரம், உ.பி, மணிப்பூரைச் சோ்ந்த 4 பேரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.