மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

News image

பதக்கம் வென்றவா்கள்.

Updated On :15 மார்ச் 2026, 7:07 pm

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

பாக்சிங் வோ்ல்ட் சாா்பில் தாய்லாந்தின் பாங்காக்கில் யூத் வீரா், வீராங்கனைகளுக்கான உலக பியுச்சா்ஸ் போட்டி நடைபெற்றது.

இதில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்திரிகா குமாரி இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் மாா்டோனாவோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மேலும் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் குஞ்சன், 54 கிலோ பிரிவில் ஜாய்ஸ்ரீதேவி, வெள்ளி வென்றனா். ஆடவா் 50 கிலோ பிரிவில் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீரரிடம் தோற்று வெள்ளி வென்றாா் இந்தியாவின் அம்பேகா்.

மகளிா் 57 கிலோ பிரிவில் ராதாமணி லாங்ஜாம் அரையிறுதி வரை முன்னேறியதால் வெண்கலம் வென்றாா். வோ்ல்ட் பாக்சிங் தலைவா் ஜென்னடி கோலோவ்கின், பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் பங்கேற்றனா்.