2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆயத்தம்: தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு அரசு ஒப்புதல்!

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! - தெரிந்துகொள்ள வேண்டியவை!
பாரிஸ் ஒலிம்பிக் 2024
பாரிஸ் ஒலிம்பிக் 2024
Published on
Updated on
1 min read

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை இன்று(ஜூலை 1) ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், நீதி ஆயோக், தேசிய விளையாட்டு சம்மேள்னம், விளையாட்டு வீரர்கள், அத்துறைசார் நிபுணர்கள் ஆகிய பல தரப்பிடமும் கருத்து கேட்டு புதிய விளையாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய குறிக்கோள்களாக, உலகளவில் விளையாட்டுத் துறையை திறம்பட எடுத்துச் செல்லுதல், பொருளாதார மேம்பாட்டுக்கு விளையாட்டு என்பதை ஊக்குவித்தல், சமூக மேம்பாட்டுக்காக விளையாட்டு என்பதை ஊக்குவித்தல், விளையாட்டை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லுதல், கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்துச் செயல்படுதல் (தேசிய கல்விக் கொள்கை 2020-இல் விளையாட்டுக்கான முக்கியத்துவம் அதிகரித்தல்) ஆகியன நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்திடும் வல்லமைமிக்கதொரு நாடாக இந்தியாவை மாற்ற அதிலும் குறிப்பாக, 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கும் ஏற்ற தொலைநோக்கு பாதைகளுடன் ‘தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-இன்’ மேம்பட்ட வடிவமாக இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியாவை விளையாட்டில் முன்னணி நாடாக உருவாக்கவும், வலிமைமிக்க ஊக்கம் மிகுந்த குடிமக்களாக விளங்கவும் இந்த புதிய கொள்கை மாற்றத்துக்கானதொரு புதிய பாதையாக திகழுமென மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Union Cabinet approves National Sports Policy 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com