விளையாட்டுத் துளிகள்..!

விளையாட்டுத் துளிகள்..!
Published on
Updated on
1 min read
  • உலகின் 12-ஆம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டாரியா கஸôட்கினா ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்துக்கு ஆஸி. அரசு அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ள கஸாட்கினா, மெல்போர்னில் குடியேறி, தனது டென்னிஸ் தொழில்முறை ஆட்டத்தை தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய ப்ரிஸ்டைல் வீரர்கள் 5 பேர் தத்தமது ஆட்டங்களில் தோற்றனர். ஞாயிற்றுக்கிழமை மேலும் 5 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், 92 கிலோ பிரிவில் தீபக் புனியா பதக்கம் வெல்வார் எனக் கருதப்படுகிறது.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27-இன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. ஹெட்டிங்லியில் வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஆட்டம் தொடங்கும் நிலையில், பலமான இந்திய அணியை எதிர்கொள்ள தொடர்ந்து நிலையாக ஆட வேண்டும் என பேட்டர் ஜோ ரூட் கூறியுள்ளார். டெஸ்ட்களில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் ரூட்.

  • ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றில் 1-4 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை பிரேஸில் தழுவிய நிலையில், அதன் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரை பதவியில் இருந்து நீக்கியது. 14 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட டோரிவல் தலைமையில் அதிக வீழ்ச்சிகளே ஏற்பட்டது.

  • ஐபிஎல் 18-ஆவது சீசனில் ஆடி வரும் பெங்களூர் அணி முந்தைய சீசன்களில் ஆடிய அணிகளைக் காட்டிலும் 10 மடங்கு சிறப்பானது என ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இரு ஆட்டங்களில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளது ஆர்சிபி. பௌலிங், பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் சமநிலையில் உள்ளது ஆர்சிபி எனக் கூறியுள்ளார் டி வில்லியர்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com