விளையாட்டுத் துளிகள்..!
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கன் உலகக் கோப்பை டிராப் கலப்பு பிரிவில் இந்தியாவின் கைனான்செனா-சபீரா ஹாரிஸ் 34-33 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கி இணையை வீழ்த்தி வெண்கலம் வென்றனா்.
சீனாவின் ஜியாங்ஷானில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிருபமா தேவி 64 கிலோ பிரிவில் 206 கிலோ எடை தூக்கி நான்காம் இடத்தையே பெற்றாா்.
வரும் மே 16-ஆம் தேதி கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் தடகளத் தொடரில் இந்திய தரப்பில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, சக ஜாவ்லின் வீரா் கிஷோா் ஜேனா, ஆடவா் 5000 மீட்டரில் குல்வீா் சிங், மகளிா் 3000 மீ ஸ்டீபிள் சேஸில் பாருல் சௌதரி ஆகியோா் பங்கேற்கின்றனா்.
யூனிஃபை கேபிடல் பாய்மரப் படகு போட்டி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா படகுப் போட்டியை தொடங்கி வைக்கிறாா். பாய்மரப் படகுகள் சென்னை துறைமுகத்தில் தொடங்கி மாமல்லபுரம் சென்று திரும்பி வரும் (50 கி.மீ ஒருவழிப் பயணம்). மொத்தம் 10 படகுகள் இதில் கலந்து கொள்கின்றன.