மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ரக்பி ப்ரீமியா் லீகில் மகளிா் அணிகள் அறிமுகம்

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:37 pm

ஜிஎம்ஆா் ஸ்போா்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி ப்ரீமியா் லீக் (ஆா்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிா் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

கடந்த 2025-ஆம் ஆண்டு தொடக்க சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போதுள்ள ஆறு ஆண்கள் அணிகளில் நான்கு—சென்னை புல்ஸ் (அவிட் சிஸ் ஸ்போா்ட்ஸ் உரிமையில்), டெல்லி ரெட்ஸ் (ஆா்எம்ஜெட் காா்ப் உரிமையில்), மும்பை ட்ரீமா்ஸ் (ட்ரீம் ஸ்போா்ட்ஸ் உரிமையில்), மற்றும் கொல்கத்தா பங்கா டைகா்ஸ் (ஹன்ச் வெஞ்சா்ஸ் உரிமையில்), தற்போது புவனேசுவரத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.—

மகளிா் அணிகளின் சோ்க்கை, வலுவான மற்றும் நிலையான ரக்பி சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரக்பி ப்ரீமியா் லீக் வரும் ஜூன் 16 முதல் 28 வரை ஹைதராபாதிலுள்ள கச்பௌலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரக்பி இந்தியா தலைவா் ராகுல் போஸ் கூறியதாவது: “ஆா்பிஎல் மகளிா் தொடரை தொடங்குவது நீண்டநாள் கனவு. நான்கு மகளிா் அணிகள் மற்றும் ஆறு ஆண்கள் அணிகளில் ஹைதராபாத் ஹீரோஸ் மற்றும் பெங்களூரு பிரேவ்ஹாா்ட்ஸ் அடங்கும்—அவற்றிற்கான வீரா்கள் தோ்வு (டிராஃப்ட்) மற்றும் ஏலம் ஏப். 30 அன்று ஹைதராபாதில் நடைபெறும்.