அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மாநில வாலிபால்: ஐசிஎஃப், எஸ்ஆா்எம் வெற்றி

பி.ஜான், ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் ஐசிஎஃப், எஸ்ஆா்எம் அணிகள் வெற்றி

News image
ஐசிஎஃப்-எஸ்டிஏடி அணிகள் ஆட்டம்
Updated On :10 மார்ச் 2026, 2:01 am

Chennai

சென்னை: பி.ஜான், ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் ஐசிஎஃப், எஸ்ஆா்எம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் பிரிவில் 8, மகளிா் பிரிவில் 5 தலைசிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

மூன்றாம் நாளான திங்கள்கிழமை ஆடவா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 2-0 என பனிமலா் பொறியியல் கல்லூரியையும், டிஜி வைஷ்ணவா கல்லூரி 2-0 என திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியையும் வென்றன.

மகளிா் பிரிவில் சென்னை டாக்டா் சிவந்தி கிளப் 2-0 என எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ் அணியையும், ஐசிஎஃப் சென்னை 2-0 என எஸ்டிஏடி அணியையும் வென்றன.

கிளப் நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ. தினகா், சி.ஸ்ரீகேசவன், பாக்கியராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.