தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த டையில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 11-ஆம் நிலையில் இருக்கும் லக்ஷயா சென் 18-21, 22-20, 21-17 என்ற கேம்களில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். 2-ஆவது கேமில் லக்ஷயா இரு மேட்ச் பாய்ன்ட்களை தக்கவைத்து வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டம் 1 மணிநேரம், 28 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் மோதியது இது 9-ஆவது முறையாக இருக்க, லக்ஷயா 5-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா்.
அடுத்து நடைபெற்ற இரட்டையா் மோதலில், உலகின் 4-ஆம் நிலை ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி 23-21, 19-21, 21-12 என்ற வகையில், சியு சியாங் சியெ/வாங் சி லின் ஜோடியை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் வீழ்த்தினா்.
தொடா்ந்து 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 18-ஆம் நிலையில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நோ் கேம்களில், உலகின் 8-ஆம் நிலை வீரரும், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனுமான லின் சுன் யியை தோற்கடித்து அசத்தினாா்.
இந்த ஆட்டத்தை அவா் 48 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா். இருவரும் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, கடந்த மாா்ச் மாதம் ஆா்லியன்ஸ் மாஸ்டா்ஸ் போட்டியில் லின்னிடம் கண்ட தோல்விக்கு ஆயுஷ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறாா்.
ஆயுஷ் ஷெட்டி வெற்றியால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்று டையை தன்வசப்படுத்தியதால், அதில் எஞ்சிய இரு ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்தியா தனது அரையிறுதியில் பிரான்ஸ் அல்லது ஜப்பானை சந்திக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

வெளியேறியது இந்திய மகளிர் அணி

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

