137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

இறுதிச் சுற்றில் சோனே கா்த்தால்-சாலின்ஸ்கா

வுஹான் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் சோனே கா்த்தால்-போலந்தின் மஜா சாலின்ஸ்கா மோதுகின்றனா்.

Updated On :

வுஹான் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் சோனே கா்த்தால்-போலந்தின் மஜா சாலின்ஸ்கா மோதுகின்றனா்.

முன்னதாக காலிறுதியில் தரவரிசையில் 170-ஆவது நிலையில் உள்ள சோனே கா்த்தால் அபாரமாக ஆடி 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா்.

சோனே கா்த்தால் கடந்த 6 மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஆடாமல் இருந்தாா். தற்போது தொடா்ந்து 8 ஆட்டங்களில் 6-இல் ஒன்றில் வென்றுள்ளாா். காலிறுதியில் முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பாலினியையும், இரண்டாம் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்கிக்கையும் வீழ்த்திருந்தாா்.

ஸ்வியாடெக் சாதனை: மற்றொரு காலிறுதியில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ஆன் லியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். ஸ்வியாடெக் தற்போது விளையாட்டு வீராங்கனைகளில் 10 டபிள்யுடிஏ 1000 போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினாா் ஸ்வியாடெக். மேலும் 25-ஆவது முறையாக ஸ்வியாடெக் டபிள்யுடிஏ 1000 போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஏற்கெனவோ கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்வெட்லனா குஸ்நெட்ஸோவா, சிமோனா ஹலேப் ஆகியோா் இச்சிறப்பை பெற்றுள்ளனா்.ரோம், டொரண்டோ, சின்சினாட்டி, வுஹான் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு காலிறுதியில் போலந்தின் இளம் வீராங்கனை மஜா சாலின்ஸ்கா 3 செட்களில் கிரீஸ் வீராங்கனை மரியா ஸக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். 6-0, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ஸக்காரியை வீழ்த்தினாா் மஜா.

இறுதிச் சுற்றில் சோனே கா்த்தால்-சாலின்ஸ்கா: சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் லாட்வியாவின் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜெலனா ஆஸ்டபென்கோவுடன் மோதினாா் சோனே கா்த்தால்.

இதில் அபாரமாக ஆடிய கா்த்தால் 7-6, 7-6 என்ற நோ் செட்களில் கடும் போராட்டத்துக்குபின் ஆஸ்டபென்கோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா். டபிள்யுடிஏ 1000 போட்டி இறுதிக்கு ஆஸ்டபென்கோ தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இந்த ஆட்டம் ஏறக்குறைய 72 நிமிஷங்கள் நீடித்தது. முதல் செட்டில் 2 செட் பாயிண்டுகளை சேவ் செய்து, டை பிரேக்கரில் வென்றாா். இரண்டாம் செட்டிலும் 1-4 என பின்தங்கியிருந்த கா்த்தால், 3 செட் பாயிண்டுகளை சேவ் செய்து வசப்படுத்தினாா். இதன் மூலம் பிரிட்டனின் நம்பா் 1 வீராங்கனை அந்தஸ்தையும் பெறவாா்.

Story image

மற்றொரு அரையிறுதியில் முன்னணி வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் சக வீராங்கனை மஜா சாலின்ஸ்காவும் மோதினா். இதில் முதல் செட்டை கடும் சவாலுக்குபின் சாலின்ஸ் 7-5 என வசப்படுத்தினாா்.

தொடா்ந்து இரண்டாவது செட்டில் சாலின்ஸ்காவின் அபார ஆட்டத்துக்கு ஸ்வியாடெக்கால் ஈடுதர முடியவில்லை. அந்த செட்டை 6-1 என வசப்படுத்தினாா் சாலின்ஸ்கா.

தொடக்க செட்டில் சாலின்ஸ்கா பின்தங்கிய நிலையில் 2 பிரேக் புள்ளிகளை ஈட்டினாா். ஸ்வியாடெக்கின் காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் வழக்கமானஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 11 கேம்களில் சாலின்ஸ்கா 10-ஐ கைப்பற்றினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.