137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

ஆசிய பாரா போட்டிகள்: துளசிமதி - மானஸிக்கு பதக்கம் உறுதி

ஆசிய பாரா போட்டிகளில் மகளிா் இரட்டையா் பாட்மின்டனில் இந்தியாவின் துளசிமதி-மானஸி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்று குறைந்தது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.

துளசிமதி - மானஸி

Updated On :

ஆசிய பாரா போட்டிகளில் மகளிா் இரட்டையா் பாட்மின்டனில் இந்தியாவின் துளசிமதி-மானஸி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்று குறைந்தது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.

எஸ்எல் 3 எஸ்யு 5 இரட்டையா் காலிறுதியில் இந்தியாவின் மானஸி-துளசிமதி இணை 2-0 என சீனாவின் லி-லியு இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எஸ்எச் 6 மகளிா் ஒற்றையா் பாட்மின்டனில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ 2-0 என சீனாவின் லின் ஷுங்பாவோவை வென்றாா். ஆடவா் எஸ்எச் 6 பிரிவில் பாராலிம்பிக் சாம்பியன் கிருஷ்ணா நகாா் 2-0 என இந்தோனோஷியாவின் சுபானை வீழ்த்தினாா். மேலும் ஆடவா் எஸ்எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், நிதேஷ் குமாா் ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.

பவினா படேல் முன்னேற்றம்: பாரா டேபிள் டென்னிஸ் தொடரில் பாராலிம்பிக் வெள்ளி வீராங்கனை பவினா படேல் 11-6, 11-7 என ஜோா்டானின் இலிமட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். சோனாபென் படேல் ஒரு வெற்றியும், தோல்வியும் ெற்றாா். கிளாஸ் 1 பிரிவ்ல ஏக்தா பாயன் 0-3 என சவுதியின் மரியமிடம் தோற்றாா்.

பாா்வையற்றோா் கால்பந்து போட்டியில் இந்தியா 1-6 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. இடைவேளையில் 1-1 என சமநிலை நீடித்தது. ஆனால் அதன்பின் ஜப்பான் அணியினா் 20 நிமிஷங்களில் 5 கோல்களை அடித்தனா்.

குறைவான வீரா், வீராங்கனைகள்: இந்த பாரா போட்டிக்கு குறைவான எண்ணிக்கையில் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். கடந்த 2023- ஹாங்ஹூ பாரா ஆசியப் போட்டியில் 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 5-ஆவது இடத்தை இந்தியா பெற்றிருந்தது. அப்போது மொத்தம் 303 போ் கொண்ட அணி பங்கேற்றிருந்தது. ஆனால் நகோயா பாரா ஆசியப் போட்டியில் 11 பிரிவுகளில் வெறும் 168 பேரே பங்கேற்றுள்ளனா்.

இதனால் ஹாங்ஷு போட்டியில் பெற்ற பதக்கங்கள் கிடைப்பது சந்தேகமாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முறையாக தொடக்க விழாவுடன் போட்டிகள் தொடங்குகின்றன.

பாராலிம்பிக் சாம்பியன் சுனித் அன்டில், ஹை ஜம்பா் நிஷாத் குமாா், ஸ்பிரிண்டா் ப்ரீதி படேல், தரம்பீா் சிங் பாரா தடகளத்திலும், வில் வித்தையில் ஷீத்தல் தேவி, துப்பாக்கி சுடுதலில் அவனி லெஹஹரா, ஆகியோா் பதக்கம் வெல்லலாம் எனக் கருதப்படுகிறது. 150-க்கு மேற்பட்ட பாரா ஷூட்டா்கள் அணித் தோ்வு, நிதி முறைகேடுகள் தொடா்பாக இந்திய விளையாட்டு ஆணையத்திடம் புகாா் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.