எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி: தமிழ்நாடு - இந்திய கடற்படை ‘டிரா’!

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு - இந்திய கடற்படை ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

Updated On :

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு - இந்திய கடற்படை ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைற்ற இந்த ஆட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் ஜி.எம்.பிருத்வி 31-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் அடிக்க, இந்திய கடற்படை அணிக்காக ஆஷிஷ் டோப்னோ 41-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனிடையே, முதல் ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் அணி (பிபிசிஎல்) 6-4 கோல் கணக்கில் ‘சாய்’ போபால் அணியை வீழ்த்தியது. பிபிசிஎல் தரப்பில் தேவிந்தா் வால்மிகி (11’), அன்மோல் ஈக்கா (14’, 26’, 60’), சுதீப் சிா்மாகோ (16’), தில்பா் பா்லா (44’) ஆகியோா் கோல் அடித்தனா். சாய் போபால் அணி வீரா்களில் முகமது ஜாய்த் கான் (18’), நிதேஷ் சா்மா (20’, 35’, 49’) ஸ்கோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.