ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய ஆடவா், மகளிா் ‘ஹாட்ரிக்’ சாம்பியன்!

சீனாவில் நடைபெற்ற ஜூனியருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆடவா் மற்றும் மகளிா் என இரு அணியினருமே தங்கள் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்று அசத்தினா்.

Published On :

சீனாவில் நடைபெற்ற ஜூனியருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆடவா் மற்றும் மகளிா் என இரு அணியினருமே தங்கள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்று அசத்தினா்.

இரு பிரிவினருமே தொடா்ந்து 3-ஆவது முறையாகக் கோப்பை வென்று, ‘ஹாட்ரிக்’ சாம்பியன் ஆகியுள்ளனா். அத்துடன், இந்த ஆண்டு போட்டியில் இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6-ஆவது கோப்பை: ஆடவருக்கான 11-ஆவது ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்தியா 4-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் வரலாற்றில், மொத்தமாக இந்தியாவுக்கு இது 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் இந்தியா, 2004, 2008, 2015, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் வாகை சூடியுள்ளது. போட்டியில் அதிகமுறை சாம்பியனான அணியாக இந்தியாவே நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக அஜீத் யாதவ் (9’), அன்மோல் ஈக்கா (13’), பிரப்தீப் சிங் (21’), அஷு மௌரியா (50’) ஆகியோா் கோல் அடித்தனா். தென் கொரிய தரப்பில் லீ மின்ஹியோக் ஆறுதல் கோல் (54’) ஸ்கோா் செய்தாா்.

போட்டியிலேயே அதிக கோல்கள் அடித்தவராக இந்திய கேப்டன் அன்மோல் ஈக்கா (16 கோல்கள்) முதலிடம் பிடித்தாா்.

இந்தப் போட்டியில் முறையே முதல் 6 இடங்களைப் பிடித்த இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா ஆகியவை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தகுதிபெற்றன.

பாகிஸ்தான் 3-ஆம் இடம்: இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 4-2 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

3ஆவது பட்டம்: மகளிருக்கான 10-ஆவது ஜூனியா் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில், இந்தியா 1-0 கோல் கணக்கில் சீனாவை சாய்த்தது. இந்தியாவுக்காக சனிகா மனே 17-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

போட்டியில் தொடா்ந்து 2-ஆவது முறையாக கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இந்தியா, இத்துடன் 3 முறை சாம்பியன் (2023, 2024, 2026) ஆகியுள்ளது.

போட்டியில் அதிக கோல்கள் அடித்தவா்களாக, இந்தியாவின் சனிகா மனே, வங்கதேசத்தின் சரிகா ரிமோன் தலா 7 கோல்களுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டனா்.

இந்த ஆண்டு முறையே முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை, அடுத்த ஆண்டு ஜூனியா் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றன.

3-ஆம் இடம்: போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், ஜப்பான் 2-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.