ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

உலகக் கோப்பை ஆட்டத்தைக் கண்டுகளித்த பிரபல பாடகி ரிஹான்னா (படங்கள் & விடியோ)

பார்படாஸைச் சேர்ந்த ரிஹான்னா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதனால்...

News image
Updated On :2 ஜூலை 2019, 5:57 am

எழில்

முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மே.இ.தீவுகளும், அரையிறுதிக்கு தகுதி பெற நூலிழை வாய்ப்புள்ள இலங்கையும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. 

முதலில் ஆடிய இலங்கை அவிஷ்கா பெர்ணான்டோவின் அதிரடி சதத்தால் 338/6 ரன்களை குவித்தது. இளம் வீரர் அவிஷ்கா பெர்ணாண்டோ, 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 315/9 ரன்களைக் குவித்து தோல்வியுற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை பிரபல பாப் பாடகி ரிஹான்னா நேரில் வந்து கண்டுகளித்தார். ரிஹான்னா, பார்படாஸைச் சேர்ந்தவர். மேற்கிந்தியத் தீவுகள் அணி என்பது பார்படாஸ், கயானா, ஜமைக்கா, டிரினிடாட் டொபகோ, லீவேர்ட், விண்ட்வேர்ட் தீவுகள் ஆகிய ஆறு கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். 

பார்படாஸைச் சேர்ந்த ரிஹான்னா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதனால் நேற்றைய ஆட்டத்தைக் காண வந்த ரிஹான்னா, மே.இ. அணிக்குத் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்தார். மே.இ. அணியின் கொடியைத் தாங்கிப் பிடித்து வீரர்களை உற்சாகமூட்டினார். ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களின் ஓய்வறைக்கு வந்து வீரர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.  

31 வயது ரிஹான்னாவை உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பாடகி என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.