
உலகக் கோப்பை இறுதி ஆட்டம் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வெற்றிக்கு 16 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பேட்டிங்: http://bit.ly/2Gb4TlS
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளை போல்ட் அற்புதமாக வீச ஸ்டோக்ஸால் ரன் எடுக்க முடியவில்லை. 3-வது பந்தில் ஸ்டோக்ஸ் சிறப்பாக சிக்ஸர் அடித்தார். இதனால், கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
4-வது பந்தில் ஸ்டோக்ஸ் இரண்டு எடுக்க முயன்றார். ஆனால், கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸ் பேட்டில்பட்டு பவுண்டரிக்கு போக இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டமாக 6 ரன்கள் கிடைத்தது. இதனால், கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரஷித் ரன் அவுட் ஆக 1 மட்டுமே கிடைத்தது. கடைசி 1 ரன் தேவை என்ற நிலை இருந்தது. இந்த பந்தும் மிட் ஆன் திசைக்கு அடித்து ஓட 1 ரன் மட்டுமே கிடைத்தது. பந்துவீச்சாளர் புறத்தில் மார்க் வுட் ரன் அவுட் ஆனார். இதனால், இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படுகிறது. இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்கினர். நியூஸிலாந்து சார்பில் போல்ட் பந்துவீசினார்.
முதல் பந்தில் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் பட்லர் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்து அசத்தினார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்தார். அடுத்து 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த பட்லர், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி இங்கிலாந்துக்கு நல்ல பினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம், இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.