
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வரும் புதன்கிழமை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய (சனிக்கிழமை) பயிற்சியின் போது, கேப்டன் விராட் கோலியின் வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்திய அணியின் முடநீக்கியல் நிபுணர் பேட்ரிக் ஃபர்ஹாத் கோலியின் விரலில் ஸ்ப்ரே அடித்தார். அதன்பிறகு, கோலி தனது விரலை ஐஸ் நிறைந்த டம்ப்ளரில் நனைத்தபடி களத்தில் இருந்து வெளியேறினார்.
ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி புதன்கிழமை தான் என்பதால், இந்த இரண்டு நாள் இடைவெளியில் கோலியின் காயம் சரியாகிவிடும் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஜாதவ் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவர் நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதனால், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பூரண குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.