சரிவைத் தடுத்த ஸ்மித்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார பந்துவீச்சு!

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் கேரேவும் நிலைத்து நின்றார்கள். கேரே சற்று விரைவாக ஆடி...
சரிவைத் தடுத்த ஸ்மித்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார பந்துவீச்சு!

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் நாட்டிங்கம்மில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மே.இ. அணியில் டேரன் பிராவோவுக்குப் பதிலாக எவின் லூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாங்கள் எப்படியும் முதலில் பேட்டிங் செய்வதாகத்தான் இருந்தோம் என்று கூறிய ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்தார். 

முதல் ஆட்டம் போலவே இந்தமுறையும் அற்புதமாகப் பந்துவீசினார்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள். இதனால் 79 ரன்களுக்குள் கடகடவென ஐந்து விக்கெட்டுகள் விழுந்தன. தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபிஞ்சும் முறையே 3, 6 ரன்களில் வீழ்ந்தார்கள். ஹோப்பின் அற்புதமான கேட்சினால் கவாஜா 13 ரன்களில் வெளியேறினார். காட்ரெல், மேக்ஸ்வெல்லை டக் அவுட் ஆக்கினார். ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்டாய்னிஸ், ஹோல்டர் பந்துவீச்சில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாகக் காட்சியளித்தது.

எனினும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் கேரேவும் நிலைத்து நின்றார்கள். கேரே சற்று விரைவாக ஆடி, அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து வந்தார். எனினும் அவர் 55 பந்துகளில் 45 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஒருவழியாக, 32.2 ஓவர்களில் 150 ரன்களை அடைந்தது ஆஸ்திரேலிய அணி. 35-வது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 47, நாதன் கோல்டர் நைல் 21 ரன்களுடன் விளையாடி வந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com