
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களை கடந்து விளையாடி வரும் கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்திய அணிக்கு ரோஹித், ராகுல் இணை முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடி வந்த அவர், பிறகு துரிதமாக ரன் சேர்த்தார். இதன்மூலம், அவர் 51-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
இதையடுத்து, 57-வது ரன்னை எடுத்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 11,000 ரன்களை எட்டினார். இவர், இந்த மைல்கல்லை 222-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார். இதன்மூலம், 11,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸில் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார்.
முன்னதாக, இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 276-வது இன்னிங்ஸில் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.
11,000 ரன்களை கடக்கும் 9-வது சர்வதேச வீரர் விராட் கோலி. அதேசமயம், 11,000 ரன்களை கடக்கும் 3-வது இந்தியர் விராட் கோலி ஆவார்.
குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டிய டாப்-5 வீரர்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.