

ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால் காயமடைந்தார் ஷிகர் தவன். இதனால் 3 ஆட்டங்களில் அவரால் ஆட முடியாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அணி மேலாளர் சுனில் சுப்ரமணியன் கூறியதாவது: காயம் காரணமாக ஜூலை 15 வரை தவனால் விளையாட முடியாது. ரிஷப் பந்தை மாற்று வீரராகத் தேர்வு செய்ய ஐசிசியிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.