

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து, 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியின் எதிர்பாராத தோல்வியினால் உலகக் கோப்பைப் போட்டி சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இலங்கை அணியின் திடீர் விஸ்வரூபம் போட்டியைப் பரபரப்பாக்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் லீக் ஆட்டங்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.