பாண்டியாவைச் சிறந்த ஆல்ரவுண்டராக மாற்றிக் காட்டுகிறேன்: உதவ முன்வரும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குப் பயிற்சியளிக்க ஆர்வமாக உள்ளார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்துல் ரஸாக்...
பாண்டியாவைச் சிறந்த ஆல்ரவுண்டராக மாற்றிக் காட்டுகிறேன்: உதவ முன்வரும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குப் பயிற்சியளிக்க ஆர்வமாக உள்ளார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்துல் ரஸாக்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஹார்திக் பாண்டியாவை மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறேன். அவரிடம் நிறைய குறைகளைக் காண முடிகிறது. உடலின் சமநிலை சரியில்லை. அவருடைய ஃபுட்வொர்க்கிலும் குறைகள் உள்ளன. இதனால் அவருக்குச் சிலசமயம் பின்னடைவு ஏற்படுகிறது. அவருக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களில். அவரை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக என்னால் மாற்ற முடியும். அவரைச் சிறந்த ஆல்ரவுண்டராக்க வேண்டும் என பிசிசிஐ விரும்பினால் நான் உதவத் தயார் என்று கூறியுள்ளார். 

39 வயது அப்துல் ரஸாக், 46 டெஸ்டுகளிலும் 265 ஒருநாள் ஆட்டங்களிலும் 32 டி20களிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5080 ரன்களும் 269 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com