ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நல்லவேளை ஐபிஎல்-லில் இது நடந்துள்ளது: குல்தீப் யாதவ் குறித்து விராட் கோலி

நல்லவிதமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு..

News image
Updated On :21 மே 2019, 12:27 pm

எழில்

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்துக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசினார்கள். இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து விராட் கோலி பேசியதாவது:

நல்லவிதமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அதில் தான் எங்கள் கவனம் உள்ளது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் இதற்கான பலன் கிடைத்துள்ளது. நம்பிக்கையுடன் உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்கவுள்ளோம். 

இங்கிலாந்து நாட்டின் சூழலை விடவும் அழுத்தமான தருணங்களைச் சரியாக எதிர்கொள்வதே முக்கியமானது. இந்தப் போட்டிக்காக நம் பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் தயாராகியுள்ளார்கள். ஐபிஎல் போட்டியின்போதே நம் பந்துவீச்சாளர்கள் யாரும் சோர்வுடன் காணப்படவில்லை. இதுகுறித்து அவர்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

குல்தீப் யாதவின் மோசமான ஃபார்ம் ஐபிஎல்-லில் தான் நிகழ்ந்துள்ளது. நல்லவேளையாக உலகக் கோப்பைப் போட்டியில் அல்ல. ஜாதவும் நல்ல ஆடுகளங்களில் விளையாடவில்லை. 

எல்லா அணிகளும் கிட்டத்தட்ட சம அளவிலான திறமைகளைக் கொண்டுள்ளன. 2015-ல் ஆப்கானிஸ்தான் நன்றாக விளையாடியது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.