சுடச்சுட

  

  மரண கலாய்க்கு பயந்து மைக்கெல் வானை பிளாக் செய்த சஞ்சு மஞ்சு!

  By Raghavendran  |   Published on : 10th July 2019 12:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vaughan_on_sanju_2

   

  சஞ்சய் மஞ்சுரேக்கர் தன்னை சமூக வலைதளமான ட்விட்டரில் பிளாக் செய்திருப்பதாக ஸ்க்ரீன்ஷாட்டுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கெல் வான் பதிவிட்டுள்ளது நெட்டிசன்களின் ஆகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்திய ரசிகர்களே இதற்கு மிகப்பெரிய ஆதரவு அளித்து வருவது கவனிக்கத்தக்கது.

  2019 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெறும் ''பிட்ஸ் அண்ட் பீஸஸ்'' வீரர் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கிண்டல் செய்திருந்தார். அதற்கு, ''உங்க வாயால போற வெத்துப் பேச்சுக்கள நிறுத்துங்க'' என்று ரவீந்திர ஜடேஜா பதிலடி தந்தது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், லீக் ஆட்டங்கள் வரை சப்ஸ்டிட்யூட் வீரராக மட்டுமே செயல்பட்டு வந்த ஜடேஜா, நியூஸிலாந்துடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இணைந்தார். அதுமட்டுமல்லாது துல்லியப் பந்துவீச்சால் அந்த அணியின் ரன்குவிப்பை அடியோடு நிறுத்தி ஒரு விக்கெட்டையும் சாய்த்தார்.

  இதனிடையே ரவீந்திர ஜடேஜா தொடர்பான சஞ்சய் மஞ்சுரேக்கரின் விமர்சனம் குறித்து வர்ணணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் மைக்கெல் வான் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். அதோடு நிறுத்தாமல் ட்விட்டரிலும் சென்று மரண கலாயில் ஈடுபட்டார். 

  அரையிறுதிக்கு முன்பாக ''உங்கள் அணி எது சஞ்சய், அதில் பிட்ஸ் அண்ட் பீஸஸ் வீரர்களுக்கு இடமிருக்கா'' என்ற மைக்கெல் வானின் கேள்விக்கு, ''இது எதிர்பார்த்ததுதான், இது என்னுடைய அணி அல்ல'' என்று சஞ்சய் பதிலளித்தார். பின்னர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற்றபோது ''இது பிட்ஸ் அண்ட் பீஸஸ் டைம்'' என்ற மற்றொரு பதிவை வான் வெளியிட்டார். அதோடு நிறுத்தாமல், ''அடடே! பிட்ஸ் அண்ட் பீஸஸ் வீரரால் இப்படி சிறப்பாக சுழற்பந்து வீச முடியுமா'' என்று கிண்டல் செய்தார். 

  இதனால் ரசிகர்கள் மத்தியில் ''சஞ்சு மஞ்சு'' என்று அன்போடு அழைக்கப்படும் சஞ்சய் மஞ்சுரேக்கர், மைக்கெல் வானை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டார். இதையே ஸ்க்ரீன்ஷாட் எடுத்த வான், ''இதோ பிரேக்கிங் நியூஸ், சஞ்சய் மஞ்சுரேக்கர் என்னை பிளாக் செய்துவிட்டார், எனது வாழ்க்கையே பூர்த்தியாகிவிட்டது'' என்று மறுபடி கலாய்த்திருப்பது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai