சுடச்சுட

    

    உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

    By எழில்  |   Published on : 12th July 2019 11:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sf

     

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

    இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி.  அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு அதற்கு பாதகமாக அமைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஸ்மித் மட்டுமே நிலைத்து ஆடி 85 ரன்களை சேர்த்தார். ஏற்கெனவே புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலமான இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஜூலை 14 -ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai