சுடச்சுட

    

    உலகக் கோப்பைக்குப் பிறகு அடுத்த மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச ஆட்டங்கள்: முழுப் பட்டியல்!

    By ச.ந. கண்ணன்  |   Published on : 14th June 2019 04:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indian_team12211111

     

     

    2019 உலகக் கோப்பைப் போட்டி ஜூலை 14 அன்று நிறைவுபெறுகிறது. இதற்குப் பிறகு ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி மொத்தமாக 9 டெஸ்டுகளிலும் 15 ஒருநாள் ஆட்டங்களிலும் 20 டி20 ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

    முதல் தொடராக வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. கடைசியாக, அடுத்த வருட மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உள்ளூரில் 3 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது இந்திய அணி. இதற்குப் பிறகு 2020 ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும்.   

    ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள், தொடர்களின் அட்டவணைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுப்பட்டியல்:

    இந்திய அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்

    டி20 தொடர்

    ஆகஸ்ட் 3 - முதல் டி20, ஃப்ளோரிடா

    ஆகஸ்ட் 4 - 2-வது டி20, ஃப்ளோரிடா 

    ஆகஸ்ட் 6 - 3-வது டி20, கயானா 

    ஒருநாள் தொடர்

    ஆகஸ்ட் 8 - முதல் ஒருநாள், கயானா

    ஆகஸ்ட் 11 - 2-வது ஒருநாள், டிரினிடாட் 

    ஆகஸ்ட் 14 - 3-வது ஒருநாள், டிரினிடாட் 

    டெஸ்ட் தொடர் 

    ஆகஸ்ட் 22 - 26 - முதல் டெஸ்ட், ஆண்டிகுவா

    ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 3 - 2-வது டெஸ்ட், ஜமைக்கா

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

    டி20 தொடர்

    செப்டம்பர் 15 - முதல் டி20, தர்மசாலா 

    செப்டம்பர் 18 - 2-வது டி20, மொஹலி 

    செப்டம்பர் 22 - 3-வது டி20, பெங்களூர் 

    டெஸ்ட் தொடர் 

    அக்டோபர் 2-6 - முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்

    அக்டோபர் 10-14 - 2-வது டெஸ்ட், ராஞ்சி 

    அக்டோபர் 19-23 - 3-வது டெஸ்ட், புணே 

    இந்தியா vs வங்கதேசம் தொடர்

    டி20 தொடர்

    நவம்பர் 3  - முதல் டி20, தில்லி 

    நவம்பர் 7  - 2-வது டி20, ராஜ்கோட் 

    நவம்பர் 10  - 3-வது டி20, நாகபுரி 

    டெஸ்ட் தொடர் 

    நவம்பர் 14-18 - முதல் டெஸ்ட், இந்தூர் 

    நவம்பர் 22-26 - 2-வது டெஸ்ட், கொல்கத்தா 

    இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் தொடர் 

    டி20 தொடர்

    டிசம்பர் 6 - முதல் டி20, மும்பை 

    டிசம்பர் 8 - 2-வது டி20, திருவனந்தபுரம் 

    டிசம்பர் 11 - 3-வது டி20, ஹைதராபாத் 

    ஒருநாள் தொடர்

    டிசம்பர் 15 - முதல் ஒருநாள், சென்னை 

    டிசம்பர் 18 - 2-வது ஒருநாள், விசாகப்பட்டிணம் 

    டிசம்பர் 22 - 3-வது ஒருநாள், கட்டாக் 

    இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் - 2020

    டி20 தொடர்

    ஜனவரி 5 - முதல் டி20, குவாஹாட்டி 

    ஜனவரி 7 - 2-வது டி20, இந்தூர்

    ஜனவரி 10 - 3-வது டி20, புணே 

    இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

    ஒருநாள் தொடர்

    ஜனவரி 14 - முதல் ஒருநாள், மும்பை 

    ஜனவரி 17 - 2-வது ஒருநாள், ராஜ்கோட் 

    ஜனவரி 19 - 3-வது ஒருநாள், பெங்களூர் 

    இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்

    டி20 தொடர்

    ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
    ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
    ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
    ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
    பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி

    ஒருநாள் தொடர்

    பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
    பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
    பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி

    டெஸ்ட் தொடர் 

    பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
    பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

    ஒருநாள் தொடர்

    மார்ச் 12 - முதல் ஒருநாள், தர்மசாலா 

    மார்ச் 15 - 2-வது ஒருநாள், லக்னோ 

    மார்ச் 18 - 3-வது ஒருநாள், கொல்கத்தா 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai