உலகக் கோப்பை வெற்றிக்கு காரணமான 3 தூண்கள்; 5 ஐபிஎல் கோப்பை... ரோஹித் அதிரடி பேச்சு!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு காரணமான 3 தூண்கள் குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாKunal Patil
Published on
Updated on
1 min read

சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆடவருக்கான சர்வதேச கிரிக்கெட்டருக்கான விருது வழங்கப்பட்டது.

ஜெய்ஸ்வாலுக்கு சிறந்த டெஸ்ட் பேட்டர் விருதும் முகமது ஷமிக்கு சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் விருதும் இந்தாண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது
சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுKunal Patil

இந்த விருது வாங்கியபிறகு ரோஹித் சர்மா பேசியதாவது:

ஜெய் ஷா, ராகுல் திராவிட், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு பல வகைகளிலும் உதவி கிடைத்தன.

ரோஹித் சர்மா
டெஸ்ட்டில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் சௌத் ஷகீல்!

எனக்கு என்ன வேண்டுமென்பதில் இவர்கள் உதவி மிகவும் முக்கியமாக இருந்தது. நிச்சயமாக வீரர்களையும் நான் மறக்கக் கூடாது. முக்கியமான நேரத்தில் அவர்களது சிறப்பான செயல்பாடுகளால்தான் வெற்றியை அடைய முடிந்தது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றதன் மகிழ்ச்சி குறித்து வார்த்தைகளால் விளக்க முடியாது. அது எல்லா நாளும் கிடைக்ககூடிய மகிழ்ச்சி கிடையாது. நாங்கள் அதிகம் நம்பிக்கொண்டிருந்தது இந்த வெற்றியைத்தான்.

உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்த கணத்தை கொண்டாட நினைத்தோம். நமது நாடும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடியதற்கு மிக்க நன்றி. சிறிய அளவிலான கூட்டத்துடன் கொண்டாடினாலும் அது ஒட்டுமொத்த நாடும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடியதுபோல் இருந்தது.

ரோஹித் சர்மா
சென்னையில் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

என்னால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அது. எங்களது உழைப்புக்கு உலகக் கோப்பை கிடைக்கவில்லை என்றால் அது நியாயமாக இருந்திருக்காது.

அதிகமானோர் என்னிடம் எந்தமாதிரியான பேட்டினை உபயோக்கிப்பீர்கள் எனக் கேட்கிறார்கள். எவ்வளவு எடை கொண்டது, பார்க்க எப்படி இருக்கிறதென எல்லாம் நான் கவனிக்கமாட்டேன். எனக்கு பேட்டினை தொட்டதும் இது சரியான பேட் எனத் தோன்றினால் அதை எடுத்துசென்று விளையாடுவேன்.

ஒருமுறை வெற்றியை ருசித்துவிட்டால் கோப்பையை வாங்கிவிட்டால் உங்களால் அதை நிறுத்தமுடியாது. இதனால்தான் நான் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளேன். இன்னும் பல கோப்பைகளை வாங்க அணியாக தயாராகவிருக்கிறோம். அணியும் என்னைபோலவேதான் நினைத்துக்கொண்டிருக்கும்.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com