ஹர்மன்பிரீத் தலைமையில் 15 பேருடன் இந்திய அணி

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஹர்மன்பிரீத் தலைமையில் 15 பேருடன் இந்திய அணி
Published on
Updated on
1 min read

புது தில்லி: மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் உமா சேத்ரி தவிர்த்து, கடந்த ஜூலை மாதம் ஆசிய கோப் பை போட்டியில் களம் கண்ட அணியினர் அப்படியே தேர்வாகியுள்ளனர். அந்தப் போட்டியில் இந்தியா, இலங்கையிடம் கோப்பையை இழந்தது.

வங்கதேசத்தில் நடைபெற இருந்த இந்த டி20 உலகக் கோப்பை போட்டி, அரசியல் ஸ்திரமற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி, காயத்திலிருந்து மீண்டுவரும் ஆல்-ரவுண்டர் ஷ்ரேயங்கா பாட்டீல், பேட்டர் யஸ்திகா பாட்டியா ஆகியோர், உடற்தகுதியின் அடிப்படையில் அணியில் இணைவர்.

சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் கண்ட தோல்வியால், இந்தியாவுக்கு கோப்பை வென்று தர வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் அணியும் இந்த முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியிருப்பதால், மகளிர் அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகளுடனும் (செப். 29), அடுத்து தென்னாப்பிரிக்காவுடனும் (அக். 1) விளையாடுகிறது இந்தியா.

அணி விவரம்

ஹர்மன்பிரீத் கெüர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (வி.கீ.), யஸ்திகா பாட்டியா (வி.கீ.), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com