வங்கதேசம் - பாக். டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து!

வங்கதேசம்-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி மழை பெய்ததால் டாஸ் போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ராவல்பிண்டி மைதானத்தில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து.
ராவல்பிண்டி மைதானத்தில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து.படம் | ஏபி
Published on
Updated on
1 min read

வங்கதேசம்-பாகிஸ்தான் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று(ஆகஸ்ட் 30) தொடங்கியது. இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் போடாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேச 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. ஆனால், காலையில் இருந்து பெய்த மழையால் டாஸ் தாமதமானது.

காலை 12.05 மணி வரை மழையின் தீவிரம் குறையாததால் டாஸ் போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் கேப்டனாக கடந்த ஆண்டு ஷான் மசூத் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வியது.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பின்னர் ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com