போர்க்களம் மாதிரி பும்ராவின் முதலிரண்டு ஓவரை விளையாட வேண்டும்..! ஆஸி. வீரர் கருத்து!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர், பேட்டர் அலெக்ஸ் கேரி கூறியதாவது
அலெக்ஸ் கேரி
அலெக்ஸ் கேரிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி அடிலெய்டில் இரவு - பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், அடுத்த போட்டியில் ஆஸி. அணி கம்பேக் தருமென அலெக்ஸ் கேரி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

இந்த ஆடுகளத்தில் இந்தியா 36க்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர், பேட்டர் அலெக்ஸ் கேரி கூறியதாவது:

ஒரு தோல்வியால் பிரச்னை இல்லை

பேட்டர்களாக நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட காத்திருக்கிறோம். சதம் அடிக்காமல் ஆட்டமிழக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

அடுத்த டெஸ்ட்டில் பேட்டிங் வாய்ப்பு வரும்போது நிச்சயமாக ரன்களை குவிப்போம். இந்த ஆஸி. அணியை நான் மிகவும் நம்புகிறேன்.

ஒரு டெஸ்ட் தோல்விக்கு அணியின் வெளியே அதிகமான எதிர்வினைகள் வருகின்றன. ஆனால், நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்தமாதிரி விளையாடவில்லை. அவ்வளவுதான். இது 4, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என எங்களுக்குத் தெரியும். எங்களுடைய பாணியிலான கிரிக்கெட்டினை விளையாடி வெல்லுவோம். எங்களுக்கு முன்னமே பல வெற்றிகள் அப்படி கிடைத்திருக்கின்றன.

நாங்கள் அணியினுள் மிகவும் அமைதியாக இருக்கிறோம். வரும் வெள்ளிக்கிழமை வாய்ப்பு கிடைக்குபோது சிறப்பாக விளையாடுவோம்.

பும்ராவை சிறப்பாக எதிர்கொள்வோம்

பும்ரா சிறப்பான பந்துவீச்சாளர். பல வருடமாக நம்.1 வீரராக விளையாடி வருகிறார். எங்களது பேட்டர்களும் உலகத் தரமான வீரர்களே. பும்ராவுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டுமென வழிகளுடன் வருவார்கள்.

முதல் இரண்டு ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சை போரக்களத்தில் சந்திப்பதுபோல் சந்திக்க வேண்டும். பும்ராவை பழைய பந்தில் பந்துவீசுமாறு நாங்கள் நன்றாக விளையாட வேண்டும். டிராவிஸ் ஹெட் அந்த வகையில் கடந்த போட்டியில் ஓரளவுக்கு நன்றாக எதிர்வினையாற்றினார்.

நான் எங்களது பேட்டர்களை நம்புகிறேன். பும்ராவுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற சில புதிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான நாள்களாக (36க்கு ஆல் அவுட் ஆக்கியது குறித்து) இருந்துள்ளன. அதே ஆடுகளம் என்பதால் மீண்டும் அதையே எதிர்பார்க்க முடியாது. எங்களிடம் முன் தயாரிப்புகளும் திட்டங்களும் இருக்கின்றன. என்ன நடக்கவிருக்கிறதோ அதுதான் நடக்கும். நான் அந்த டெஸ்ட் போட்டிக்காக இங்கு வரவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com