ஆஸ்திரேலிய அணியில் பாகுபாடா? வர்ணனையாளர்களை சாடிய கம்மின்ஸ்!

ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்குள் பாகுபாடு இருப்பதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. அதனால் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஓய்வறையில் ஏதோ பிரச்னை வெடித்ததாக வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

3ஆவது நாளில் மோசமாக விளையாடிய ஆஸி. அணி 4ஆவது நாளில் என்ன செய்ய வேண்டுமென ஹேசில்வுட்டிடம் கேட்கப்பட்டபோது, “இந்தக் கேள்வியை பேட்டர்களிடம் சென்று கேட்கலாம். நான் ஓய்வெடுக்க வேண்டும். சிறிது மருத்துவமும் பார்க்க வேண்டும்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வர்ணனையின்போது இதுகுறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் பாகுபாடா?

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

ஆஸி. அணி சிறப்பாக இருக்கிறது. சில வர்ணனையாளர்கள் 100 சதவிகிதம் தவறாக புரிந்துகொண்டார்கள். அணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. சில விஷயங்கள் சரியாக செல்லாதபோது சிலர் ஆதரவு தெரிக்கிறார்கள் சிலர் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள். நாங்கள் வெற்றிபெற முனைப்புடன் பயிற்சி எடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறோம்.

நேற்று போலண்ட் சிறப்பாக பந்துவீசினார். கடந்த ஆண்டும் சரி இப்போதும் சரி சிறப்பாக பந்துவீசி வருகிறார். அடிலெய்டு ஆடுகளத்துக்கு ஏற்ற பந்துவீச்சாளராக ஸ்காட் போலண்ட் இருப்பார்.

தேவைப்பட்டால் பந்துவீசவும் மிட்செல் மார்ஷ் தயாராக இருக்கிறார். மருத்துவக்குழு அவர் உடன்தான் இருக்கிறார்கள். சில நேரங்களில் பந்துவீச தேவைப்படுமென நினைக்கிறேன்.

சொந்த மண்ணில் விளையாடுவது அழுத்தமானது

சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாடும்போது சிறிது அழுத்தமாகத்தான் இருக்கும். அதிலும் தோல்வியுறும்போது அழுத்தம் கூடுதலாகும். உலகக் கோப்பை, சில தொடர்கள் முன்பு இதுமாதிரி பார்த்திருக்கிறோம். நாங்கள் இங்கு (ஆஸ்திரேலியாவில்) விளையாடுவதை விரும்புகிறோம். கடந்த வாரம் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தெரியும்.

அணியினுள் அனைவருக்கும் தனிப்பட்ட விதத்திலும் அணியாகவும் பெருமை இருக்கிறது. மீதமிருக்கும் போட்டிகளுக்காக காத்திருக்கிறோம்.

நான் முதல் இன்னிங்ஸில் நன்றாக பந்துவீசினேன். 2ஆவது இன்னிங்ஸில் சில விஷயங்களை முயன்றேன். ஒட்டுமொத்தமாக எனது ரிதம் குறித்து மகிழ்ச்சிதான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com