ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய மகளிரணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜெமிமா 23, ஹர்லின் தியோல் 19, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 17 ரன்களும் எடுத்தார்கள். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
ஆஸி. சார்பில் மேகன் சௌட் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அலானா கிங், கிம் கர்த், கார்ட்னர், சதர்லேண்ட் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.
இதில் பிரிஸ்பேன் ஆடுகளத்தில் முதல் போட்டியில் 34.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து ஆஸி. மகளிரணி 101 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
மீகன் ஷட் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
மீகன் ஷட் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


