
சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சத்தினை சமன்செய்துள்ளார். மேகாலய அணிக்கு எதிரான போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்து 10 ஓவர்களில் 143 ரன்களை அடித்து வெற்றி பெற செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மேகாலய அணி 20 ஓவர்கள் முடிவில் 142/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 9.3 ஓவர்களில் 144/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதில் அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். இதில் 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதற்கு முன்பாக சையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரரான உர்வில் பட்டேல் அதிவேகமாக சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
தற்போது இந்த சாதனையை அபிஷேக் சர்மா சமன்செய்துள்ளார்.
குறைவான பந்துகளில் சதம் அடித்த இந்தியர்கள்
அபிஷேக் சர்மா - 28 பந்துகள்
உர்வில் படேல் - 28 பந்துகள்
ரிஷப் பந்த் - 32 பந்துகள்
ரோஹித் சர்மா -35 பந்துகள்
உர்வில் படேல் - 36 பந்துகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.