
லப்பர் பந்தில் வரும் கெத்து போல, இந்தமுறையும் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் டக்-அவுட் ஆகியுள்ளார்.
5 ஆட்டங்கள் கொண்ட பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்றிருக்கும் நிலையில், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இதனால், இரண்டாவது டெஸ்ட்டிலும் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக தன்னுடைய இடத்தில் களமிறக்கியுள்ளார் ரோஹித் சர்மா.
இந்த நிலையில், கே.எல்.ராகுலுடன் களமிறங்கிய ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் ஜெய்ஸ்வால் டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தில் முதல் பந்தை சாமிக்கு விடும் கெத்து, அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிடுவதை போன்று, இந்த முறையும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 26, கில் 25 களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.