
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3-வது இடத்தில் இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியினால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 60.71 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், 59.26 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 57.29 சதவிகித வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.