
முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் இந்திய வீரர் முகமது சிராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது தொடர் 1-1 சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 2ஆவது டெஸ்ட்டில் சிராஜ் டிராவிஸ் ஹெட்டிடம் சண்டைக்கு சென்றது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில் முகமது சிராஜ் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
டிராவிஸ் ஹெட் கருணையே இல்லாமல் நான்கு பக்கம் அடித்து ரன்கள் குவித்தார். சிராஜ் உனக்கு அறிவே இல்லையா? 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவரை நீ பாராட்ட வேண்டும். அதைவிட்டு ஏதோ டக்கவுட் செய்தமாதிரி போடா என்ற சொல்லுவது சரியில்லை.
டிராவிஸ் ஹெட் அலட்சியமாக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்துள்ளார். 140க்கு பிறகு ஆட்டமிழக்க வைத்து என்ன பயன்? இதற்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா? இது வெறும் பைத்தியக்காரத்தனம் என்றார்.
சிராஜ் 2ஆவது இன்னிங்ஸில் 98 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.