
இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிச.14ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த செப்டம்பரில் இருந்து மிட்செல் மார்ஷுக்கு முதுகுவலி இருந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆல் - ரவுண்டராக அவருக்கு மிகுந்த அழுத்தம் இருக்கிறது.
முதல் டெஸ்ட்டில் 17 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட்டில் இவருக்கு மாற்றாக வெப்ஸ்டரை 15 பேர்கொண்ட அணியில் சேர்த்தார்கள். ஆனால், மிட்செல் மார்ஷ் விளையாடினார். 4 ஓவர்கள் மட்டுமே வீசி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
தேவைப்படும் அளவுக்கு பந்துவீசுவேன்
இந்தத் தொடருக்கு முன்பாக நாங்கள் சரியாக திட்டமிட்டிருந்தோம். நான் அதிகமாக பந்துவீசவில்லை. நான் பந்துவீச நினைத்தாலும் எனது மருத்துவக் குழுவினர் ரோனி, கம்மின்ஸ் அதற்கு உடனடி ஒப்புதல் அளிக்கவில்லை. படிப்படியாக பந்துவீசலாம் என்றார்கள். நான் அவர்களை நம்புகிறேன்.
அதிகமாக பந்துவீசாவிட்டாலும் எனது உடல்நலம் தற்போது நன்றாகவே இருக்கிறது. கம்மின்ஸுக்கு நான் தேவைப்படும் அளவுக்கு பந்துவீச தயாராக இருக்கிறேன்.
கடந்த சில வருடங்களாக எங்களது ஆல் ரவுன்டர்கள் அதிகமாக பந்துவீசவில்லை. ஆனால், எனது மருத்துவக் குழுவுக்கும் கம்மின்ஸுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
கம்மின்ஸுக்கு நன்றி
முதலிரண்டு டெஸ்ட்டில் நான் பந்துவீசியதுக்கு அவர்களே முக்கிய காரணம். அது குறித்து சில சலசலப்புகள் இருப்பது தெரியும். நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. எனது உடல்நலம் நன்றாக இருக்கிறது.
நான் சரியாக எனது பங்கினை செய்கிறேனா என்பது மட்டுமே முக்கியம். 5 ஓவர்கள் மட்டும் வீசுகிறேனா அல்லது எப்போதாவது நல்ல பந்துகள் வீசி விக்கெட்டுகள் எடுக்கின்றேனா அல்லது எங்களது பந்துவீச்சாளர்கள் சோர்வடையும்போது நான் பந்துவீசுகிறேனோ எப்படியிருந்தாலும் எனக்கு பிடித்திருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.