இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!

டிராவிஸ் ஹெட்டை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிட்ட ரிக்கி பாண்டிங்..!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டிராவிஸ் ஹெட்டை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

டிராவிஸ் ஹெட் - படம் : ஏபி

Updated On :

பார்டர் - கவாஸ்கர் தொடரில் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் 140 ரன்கள் குவித்தார். அதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஹெட்.

கடந்த 18 மாதங்களாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் 163 ரன்கள், ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 137 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இவரை பலரும் ஆஸி.யின் லெஜண்ட் கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

3ஆவது டெஸ்ட் டிச.14ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

தலைசிறந்த வீரராக மாறி வருகிறார். தற்போதைக்கு டிராவிஸ் ஹெட் தலைசிறந்த வீரர் என்று கூறமுடியாது. ஆனால், விரைவில் அந்த நிலையை அடைந்துவிடுவார். பல நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது சிறப்பாக விளையாடியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகள், ஆஷஸ் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நினைத்துப் பாருங்கள். டிராவிஸ் ஹெட் இதுமாதிரி கணங்களில் தனித்து நிற்கிறார்.

ஹெட் கிட்டதட்ட கில்கிறிஸ்ட் மாதிரி விளையாடுகிறார். கில்கிறிஸ்ட் 6,7ஆவது இடத்தில் விளையாடுவார். ஆனால், ஹெட் சிறிது முன்பாக 5ஆவது இடத்தில் விளையாடுகிறார். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது.

டிராவிஸ் ஹெட்டின் மனப்பான்மைதான் அவரை அப்படி ஆடவைக்கிறது. ஆட்டமிழக்க பயப்படுவதில்லை, எதிர்மறையான விஷயங்களுக்கு கவலைப்படுவதில்லை. அவர் செய்யும் அனைத்திலும் நேர்மறையானவற்றையே பார்க்கிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.