ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ-ஆன் தவிர்ப்பு..! இந்திய வீரர்கள் கொண்டாட்டம்!

இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தாண்டியதை கோலி, ரோஹித் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.
ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ- ஆன் தவிர்ப்பு.
ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ- ஆன் தவிர்ப்பு. படங்கள்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ.
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தாண்டியதை கோலி, ரோஹித் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள்.

ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. 252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டதுக்கு இந்திய வீரர் கோலி, பயிற்சியாளர்கள் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். கம்மின்ஸ் ஓவரில் பவுண்டர் ஆகாஷ் தீப் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com