கோலி, ஸ்மித், ரூட் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? முன்னாள் வீரரின் கருத்து!

முன்னாள் ஆஸி. வீரர் கோலி, ஸ்மித், ரூட் ஓய்வினை மற்றவர்கள் தீர்மானிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.
ஸ்மித், கோலி, ரூட்
ஸ்மித், கோலி, ரூட் கோப்புப் படங்கள்.
Published on
Updated on
2 min read

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரிக் சேப்பல் கோலி, ஸ்மித், ரூட் ஓய்வினை யாரும் தீர்மானிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் ஃபேப் போர் (தலைசிறந்த நால்வர்) என கோலி, ஸ்மித், ரூட், வில்லியம்சன் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் ரூட் தவிர்த்து மற்றவர்கள் சுமாராகவே சமீப காலமாக விளையாடி வருகிறார்கள்.

இபிடிஎஸ் எனப்படும் எலைட் பர்பாமென்ஸ் டிக்ளைன் சின்ரோம் வியாதினால் மேற்சொன்ன கோலி, ஸ்மித், ரூட் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் சேப்பல்.

தங்களது உச்சபட்ட அளவுக்கு குறைவாகவே தற்போது பேட்டிங் செய்து வருகிறார்கள்.

காலத்தினுடனான போராட்டம்

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரிக் சேப்பல் கூறியதாவது:

கோலி, ஸ்மித், ரூட் இவர்களின் வீழ்ச்சி உணர்ச்சிவயமானது இல்லை. இது நுட்பமானது. அவர்கள் ஆட்டத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொருத்தது. அவர்களது தன்னுணர்வு மிக்க உச்சபட்ச ஃபார்மில் இருந்து, தற்போது பாதுகாப்பாக விளையாட எடுத்த முடிவினால் ஏற்பட்டது.

எப்போது ஓய்வை அறிவிக்க வேண்டுமென அவர்களுக்குத் தெரியும். மற்றர்கள் அவர்கள் விஷயங்களில் தீர்மானிக்க வேண்டாம்.

காலத்தினுடனான போராட்டத்தில் வெற்றி பெறுவதைவிட அவர்களது விருப்பத்தின்படி மரியாதையாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.

கோலியின் பிரச்னை

தற்போது கோலியின் தொடக்கம் மிகவும் எச்சரிக்கையாக தொடங்கப்படுகிறது. அவர் இயல்பாக விளையாட முதல் 20,30 ரன்கள் தேவைப்படுகிறது.

நம்பிக்கை என்பது விளையாட்டு வீரனுக்கு முக்கியம். சந்தேகம் ஏற்படும்போது, அது தெளிவான முடிவினை குழப்பி அதிரடியாக ஆடவைக்கிறது. கோலியின் மனபோராட்டம் தெளிவாக இருக்கிறது. அது அவரது அதிரடி ஆட்டத்துக்கும் ஆட்டமிழக்காமல் இருக்க எச்சரிக்கையாக விளையாடுவதற்கும் இடையில் இருக்கிறது.

ரூட் பிரச்னை

ஜோ ரூட்டுக்கு மனதிட்பம்தான் காரணம். சுழல், வேகப் பந்துவீச்சாளர்களை அடிக்க முடியும். ஆனால், ரூட்டுக்கு தற்போது நோக்கம் மாறியிருக்கிறது. ரிஸ்க் எடுப்பது குறைந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் பிரச்னை

ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கத்துக்கு மாறான பேட்டிங்கினால் பெயர் போனவர். ஸ்மித்தின் வீழ்ச்சிக்கு காரணம் அவரது உடல்நிலையைவிட மனதுதான் காரணம்.

மனமும் உடலும் மிக அசதியாக இருக்கிறது. அது அவரது அமைதியான விரோதியாக இருக்கிறது. நீண்ட நேரம் கூர்மையாக அவதானிக்கும் ஸ்மித்தின் கவனம் தற்போது சவாலாக மாறியுள்ளது.

ரசிகர்கள், அணியினர் என அனைவரது எதிர்பார்ப்பும் அவர்மீது உணர்ச்சிகரமான சுமையை ஏற்றிவிடுகிறது.

அவர்களே அவர்களுக்கு எதிரி

எதிரி என்பது பந்துவீச்சாளர்கள் இல்லை. உங்கள் தலைக்குள் இருக்கும் நீங்களே. இதற்கு முன்பு நீங்கள் விளையாடிய அளவுக்கு விளையாட முடியவில்லையே என்ற உணர்வு அமைதியாக உங்களுக்குள் இருக்கிறது.

இந்த மாற்றம் என்பது தவிர்க்கமுடியாதது. வயது மனதையும் உடலையும் பாதிக்கிறது. இதனால் கோலி, ஸ்மித், ரூட் பாதிக்கப்படுகிறார்கள்.

தங்களுக்கு உள்ளாகவே போராடுகிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் ஆசைகளை சுமந்து திரிகிறார்கள். சுனில் கவாஸ்கர் சொல்லியதுபோல ’பேட்டிங்கில் மிகவும் கடினமானது நாம் யாராக இருந்தோமோ அப்படி தற்போது இல்லை என்பதை உணர்வது’ என்றார்.

20, 30 ரன்களைக் கடந்தால் அவர்களது மனதளவில் மாற்றம் ஏற்படுகிறது. தலைசிறந்தவர் என்பது பிரைம் ஃபார்மில் சாதிப்பது மட்டுமல்ல எப்படி சவால்களை அணுசரித்து இறுதியில் எவ்வாறு முடிக்கிறோம் என்பதிலும் இருக்கிறது. கோலி, ஸ்மித், ரூட் தங்களது கடைசி அத்தியாயங்களை எழுதுகிறார்கள். அவர்களது திறமைக்காகவும் தைரியத்துக்காவும் நாம் அவர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com