நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள்: மெக்டொனால்ட் நம்பிக்கை..!

கவாஜா குறித்து ஆஸி. தலைமைப் பயிற்சியாளார் மெக்டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா
Published on
Updated on
1 min read

உஸ்மான் கவாஜா குறித்து நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள் என ஆஸி. தலைமைப் பயிற்சியாளார் மெக்டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. 4ஆவது போட்டி டிச.26இல் மெல்போர்னில் தொடங்குகிறது.

38 வயதாகும் கவாஜா 3 டெஸ்ட் போட்டிகளில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிகவும் சுமாராகவே விளையாடிவரும் கவாஜா மீது ஆஸி. தலைமைப் பயிற்சியாளார் மெக்டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மெக்டொனால்ட் கூறியதாவது:

நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள்

உஸ்மான் கவாஜா நன்றாகவே இருக்கிறார். சமீபகாலமாக பேட்டிங் கடினமாகவே இருக்கிறது. அவரது பாணி தெளிவாக இருக்கிறது. அவரது தயாரிப்பு முறைகள் சரியாக இருக்கின்றன. நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள். அடுத்த சில போட்டிகளில் அது நடக்கும்.

தொந்தரவு செய்யும் லபுஷேன்

லபுஷேனின் நோக்கம் சரியாக இருக்கிறது. அவர் சிறப்பாக இருக்கும்போது நாங்கள் சிறந்த சாதனைகளை வைத்துள்ளோம். அடிலெய்டில் பிஸியாக விளையாடினார். ஆடுகளத்தில் எதிரணியினருக்கு சிறிது தொந்தரவு தரும்படி ஆடுவார். பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் அதையே எதிர்பார்க்கிறோம்.

இரண்டு பக்கமும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்கள். இரண்டு பக்கமும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்தத் தொடரில் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன.

இந்தியாவின் பக்கம் அச்சுருத்தும் வகையில் பேட்டிங் வரிசை இருக்கிறது. அடுத்த சில போட்டிகளில் அதில் சில மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com