
பாகிஸ்தானின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தன்னை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கும்படி பிசிபியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என வெல்ல 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் நடைபெறவிருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவுடன் அடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த நிலையில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி கூறியதாக வெளியான தகவலில் இருப்பதாவது:
சாம்பியன்ஸ் டிராபி முடியும்வரை ஷாஹீன் ஷா தன்னை டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளார்.
வங்கதேச பிரீமியர் லீக்கில் ஷாஹீன் ஷா விளையாட பிசிபி அனுமதி அளித்துள்ளது. இதில் அவருக்கு குறிப்பிடத்தக்க பணம் கிடைப்பதாலும் ஃபிட்னஸை பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக இருப்பதாக ஷாஹீன் ஷா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் டெஸ்ட்டில் பங்கேற்பதாக ஆப்க்கிடம் அஃப்ரிடி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.