பும்ராவை நினைத்து பச்சாதாபம் ஏற்படுகிறதா? கம்மின்ஸ் கூறியதென்ன?
பும்ரா நன்றாக பந்துவீசியும் தோல்வியின் பக்கம் இருப்பதால் அவர் மீது பச்சாதாபம் ஏற்படுகிறதா என பத்திரிகையாளர்கள் கம்மின்ஸிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கம்மின்ஸ் சிரித்துக்கொண்டே பேசியது வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி வருகிறார் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா. 30 விக்கெட்டுகள் எடுத்து இந்தத் தொடரிலேயே அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவராகவும் பும்ரா இருக்கிறார்.
இந்த நிலையில் பும்ரா நன்றாக பந்துவீசியும் தோல்வியின் பக்கம் இருப்பதால் அவர் மீது பச்சாதாபம் ஏற்படுகிறதா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
பும்ரா நிச்சயமாக சிறந்த வீரர். உங்களுக்கே தெரியும், அவர்தான் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். அவர் எங்களுக்கு கடினமான நேரத்தை உண்டாக்கியுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். பிட்ச்சில் எந்தவிதமான உதவியும் இல்லாதபோதும் அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பும்ராவின் வேகத்தில் சில நேரம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்திருக்கிறது என்றார்.
பும்ரா நன்றாக பந்துவீசியும் தோல்வியில் முடிந்தததால் அவரை நினைத்து பச்சாதாபம் ஏற்படுகிறதா? என பத்திரைகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு கம்மின்ஸ், “பச்சாதாபம்? அவ்வளவாக இல்லை” எனக் கூறி சிரிப்பார். பத்திரிகையாளர்கள் அனைவரும் உடன் சிரிப்பார்கள்.
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதுபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.