ஆபாசமாக கொண்டாடிய டிராவிஸ் ஹெட்? கம்மின்ஸ் கூறியதென்ன?

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.
டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ்
டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ்படங்கள்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் ரிஷப் பந்த் விக்கெட்டினை வீழ்த்திய ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் வித்தியாசமான கொண்டாட்டம் இந்தியர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலரும் ”இது ஆபாசமான கொண்டாட்டம்” என டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். டிராவிஸ் ஹெட் விரல் சூடாக இருப்பதால் ஒரு கோப்பை ஐஸ் கட்டியில் வைக்க வேண்டும். அதுதான் இது. அது வழக்கமாக எங்களுக்குள் நடக்கும் நகைச்சுவைதான். இது ஏற்கனவே காபா அல்லது வேறு எங்கோ கூட ஹெட்டுக்கு விக்கெட் விழுந்தபோது நேராக குளிர்சாதனபெட்டிக்கு சென்று ஐஸ் பக்கெட்டினை எடுத்து அதில் விரலை விட்டு நாதன் லயனுக்கு முன்பாக நடந்தார். அதுபோலத்தான் இது நகைச்சுவையானது. இதுவும் அதுவாகத்தான் இருக்கும், வேறெதுவும் இல்லை என்றார்.

டிராவிஸ் ஹெட் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி
டிராவிஸ் ஹெட் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரிபடம்: இன்ஸ்டா / டிராவிஸ் ஹெட்

போட்டிக்குப் பிறகு டிராவிஸ் ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ் கோப்பையில் விரலை விட்டபடி இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவர் ஏற்கனவே இதுபோல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com